எப்படி
மெரினால இவ்வளவு பெரிய கூட்டம்
கூடிருக்கும்? நம்மளால யோசிக்க
முடியாத ஒரு கூட்டம். ஜல்லிக்கட்டுக்காக
இவ்ளோ பெரிய கூட்டமா? கண்டிப்பா
ஜல்லிக்கட்டையும் மீறி ஒரு காரணம்
இருக்கும். அப்படி பாத்தா
பொதுவா ஒரு மூணு காரணத்தை சொல்லலாம்.
ஜல்லிக்கட்டு – எங்களது
வீர
விளையாட்டு,
பாரம்பரியம்
“தமிழன் என்றோர் இனம்
உண்டு
தனியே அவனுக்கோர் குணம் உண்டு ”
இன்னைக்கு
நாம எவ்ளோ தொழில்நூட்பத்தை ஏத்துக்கிட்டாலும்
, நம்முடைய மரபணு தமிழனோடது
.அதை யாராலும் மறுக்க முடியாது
. அதுனால, நாம இப்படி தான் போராடுவோம்
. போராட்டம், எதிர்ப்பு இதெல்லாம் தமிழரின் இரத்தத்தையிலேயே
இருக்கு . அத மாத்தா முடியாது.
இன்னைக்கு ஏதோ ஒரு விஷயத்துக்காக ஜல்லிக்கட்டை விட்டுகுடுத்த நாளைக்கு எதை எதையோ விட்டுகொடுக்க
வேண்டி இருக்கும் . அப்பறம் கோதுமை தான் தேசிய உணவு அதை
நீங்க எல்லாரும் சப்பிட்டே ஆகணும்னு ஒரு
நிலைமை வந்தாலும்
ஆச்சர்யத்துககு இல்ல.
நம்முடைய கலாச்சாரம்
, மொழி , பண்பாடு இதெல்லாம் காப்பாத்த வேண்டிய கடமை
எல்லாருக்கும் இருக்கு. அத ரொம்ப அழகா
செயல் படுத்தி காமிச்சுருக்காங்க மாணவர்களும் இளைஞர்களும்.
இப்ப சின்ன கொழந்தையில இருந்து, பெரியவங்க வரை ரொம்ப விழிப்புணர்வோடு இருகாங்க, தமிழ் என்றால்என்ன? நம்ம
கலாச்சாரம் பண்பாடு எவ்ளோ தனி தன்மை வாய்ந்ததுனு.
ஹிப் பாப் தமிழா(
கார்த்திகேய
சிவசேனாதிபதி,
ராஜசேகர் வழக்கறிஞர்)
இப்ப இந்த போராட்டம், போரட்டம்னு சொல்றதை விட எழுச்சினு சொன்ன தான் சரியா
இருக்கும். இந்த எழுச்சிக்கு முக்கியமான கரணம்னு
பாத்தா இவங்க மூணு பேருக்கு ரொம்ப பெரிய பங்கு இருக்கு.
ஹிப் பாப் தமிழா
– வெறும் ஒரு இசை அமைப்பாளரா
மட்டும் இருந்துட்டு போகாம
சமூக பொறுப்போடு ரொம்ப முன்னாடியே
சரியா தெரியல, ஒரு ஆறு ஏழு மாசம் முன்னாடியே ஒரு ஆல்பம்
பாட்டு மூளையமா ஒரு கருத்தை
சொன்னாரு. அதுல நாட்டு மாடு
மற்றும் நாட்டு
இனம்
அழியறதை பத்தியும் அழகான வரிகளோடு சொல்லிருப்பார்
. நன்றி தோழா!
இந்த பாட்ட கேக்காத இளைஞனனே
இல்லனு தான் சொல்லணும், அது ஒரு மாதிரி மெதுவா பசங்க
மனசுலே பதிந்திருந்தது.
கார்த்திகேய சிவசேனாதிபதி
( Managaing trustee of senathipathy kangayam cattle research foundation) –
2008 இக்கு அப்பறம் ஜல்லிக்கட்டு நடக்கவே இல்ல
. அப்ப இருந்து ஜல்லிக்கட்டு
நடக்க என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம்
செஞ்சிட்டு இருக்கார்.
ராஜசேகர் வழக்கறிஞர் – இப்ப நாம இவரை நெறைய
தொலைக்காட்சியில் பாக்குறோம்.
அனா இவரு ரொம்ப காலமா ஜல்லிக்கட்டுக்காகவே கோர்ட்ல கேஸ்
போட்டுட்டு இருக்காரு. அவரோட சொத்தையெல்லாம்
கூட வித்து செஞ்சுட்டு இருக்காரு.
எவ்ளோ பெருமையா
இருக்கு .. இதெல்லாம் அவங்க தனி
பட்ட நலனுக்காக
செய்யல இதெல்லாம் தமிழ்
இனத்துக்காகவே செய்றாங்கே.
ரொம்ப பெருமையா இருக்கு இவங்கள பத்தி பேச எனக்கு வாய்ப்பு கெடச்சதுக்கு
.
தமிழனின் விரக்தி
எப்படி விரக்தி வந்துச்சு,
காவேரி தண்ணிய உச்ச நீதி மன்றம் விட சொல்லுது ஆனா அவங்க
அதுக்கு எவ்ளோ பெரிய போராட்டம் பண்ணினாங்க.
கடைசி வரை தண்ணி வரவே இல்ல.
முல்லை பெரியார் அணை
பிரச்னை, 500 1000 காசு பிரச்னை, விவசாயிகள்
செத்து போய்ட்டு இருகாங்க,
அத பத்தி யாரும் கவலை
படலை. அபப்டி இப்படினு
. எல்லார்க்கும் ஒரு மாரி விரக்தி
வர ஆரம்பிச்சுடுச்சு.
இது வெறும் ஜல்லிக்கட்டுக்காக இல்ல,
மொத்தமா எல்லாத்துக்கும் சேத்து தான் இன்றைய
எழுச்சி.
இப்ப இருக்க மாணவர்கள் மற்றும்
இளைஞர் ரொம்ப பொறுப்பானவங்க.
பொறுப்பை யாருக்கும் சொல்லி தர முடியாது அது தான வரணும்.
அப்படி பாத்த என் தமிழனுக்கு அது நிறையவே
இருக்கு. எப்படி இவ்ளோ பெரிய கூட்டத்தை
சேதீங்கனு என்னால கணிக்க முடியாது.
அனா இனி எப்பவும் இந்த
ஆதரவு எல்லா தமிழனுக்கும்
இருக்கும்னு நம்புறேன்.
மேடை போட்டு சுலபமா பேசுறாங்க,
மாணவர்கள் காவேரிக்கு போராடால,
முல்லை பெரியார் அணைக்கு போராடால
, விவசாயத்துக்கு போராடால
இன்னும் பல.
இதுக்கெல்லாம் எதுக்கு போராடனும்?
இதையெல்லாம் நமக்கு மறுக்க படுது
. இதை கேட்டு வாங்க தான் நாம மத்திய மாநில அமைச்சர்களை தெரிந்து எடுத்து வச்சுருக்கோம்
. ஒரு அபார நம்பிக்கை ஏதாவது ஒரு கார்யத்துலே தவறினாலும் ஒரு காரியத்தை
நமக்காக செய்வாங்கனு. தவறியது அவங்க தப்பு. இதுக்கு எந்த இளைனனும் பொறுப்பாக
மாட்டான். இருந்தாலும் ஓத்துக்குறேன்
, நம்முடைய தவறு நெறைய
இருக்கு .
"விழித்தோம் தொடர்வோம், தமிழுக்காகவும்
தமிழனுக்காகவும்"
எப்படியும் வெற்றி நமதே!!
இதை யாராலும் மறுக்க முடியாது!!
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து
நில்லடா”
தவறுகள் இருப்பின் கமெண்டில் பதிவு செய்யுங்கள்
தவறுகள் இருப்பின் கமெண்டில் பதிவு செய்யுங்கள்
